அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பார்த்தீங்கன்னா…  தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டாங்க… திரு ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சுற்றுப்பயணம் செஞ்சு, எல்லா பொதுக்கூட்டத்திலும் பேசினாரு. உதயநிதி ஸ்டாலின் பேசினாரு.

ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கின்ற குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை. கிடைத்ததா ? கிடைக்காது..  ஏமாற்று வேலை. திமுககாரனை பார்த்து பார்த்து கொடுத்துட்டு இருக்காங்க. பணக்காரனுக்கு கிடைக்குது..  ஏழைக்கு கிடைக்கல. ஆக இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஆகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2 அரை ஆண்டு காலம் தொடர்ந்து வலியுறுத்திக்கிட்டு இருந்தோம்.

திரு ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் தேர்தல் நேரத்தில்.. வாக்குறுதி கொடுத்தீங்க… திமுக தேர்தல் அறிக்கையில் நீங்க வெளியிட்டீங்க…  ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை. எப்பொழுதும் வழங்குனீங்க ? இரண்டரை ஆண்டு காலம் தொடர்ந்து நாங்கள் கேட்டோம். சட்டமன்றத்தில் கேட்டோம்… பொதுக் கூட்டத்தில் கேட்டோம்….

நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து காரணத்தினால் தான்,  வேறு வழி இல்லாமல் இப்பொழுது ஆயிரம் ரூபாய் ஒரு சிலருக்கு தான் கொடுத்திருக்காங்க.. அவர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி படி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்கவில்லை, இது கண்டிக்கத்தக்கது. இது தான்   எல்லா இடத்திலும் போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க என தெரிவித்தார்.