செய்தியாளர்களை சந்தித்த தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மகாத்மா காந்தி அவர்களை இவர்களை விட அதிகமாக தூக்கிப் பிடிப்பவர்கள் நாங்கள். இந்தியாவினுடைய தந்தையாக… குறிப்பாக எதற்கெல்லாம் குரல் கொடுத்தார்? அவர் குரல் கொடுத்ததெல்லாம் சொல்லணும்.

திராவிடஸ்தான்  தான் பத்தி பெரியார் பேசினாங்க.  அதற்கு பாரதியார் அவர்களுடைய கருத்து என்ன ? அதை சொல்லணும். மிக முக்கியமாக காந்திஜி அவர்களுடைய கருத்து என்ன ? அதெல்லாம் சொல்லணும்… வேற வேற காலகட்டத்தில் பெரியாருடைய எத்தனையோ கருத்துக்களுக்கு மகாத்மா காந்தி அவர்கள் எதிர் கருத்து சொல்லி இருக்காங்க.

இவங்க தமிழ்நாட்டை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்று போராடிய காலகட்டத்தில மகாத்மா காந்தி என்ன சொன்னாங்க ? முகமது. அலி  ஜின்னா அவர்கள் கிட்ட பெரியார் அவர்கள் பேசும்பொழுது மகாத்மா காந்தி அவர்களுடைய கருத்து என்ன ? அதனால் முதலமைச்சர் அவர்கள் காதிலே பூ சுத்துகின்ற வேலையை விட்டுட்டு,  உண்மையான மகாத்மா காந்தியோட கருத்துகளை தமிழகத்தில் கொண்டு வாங்க.

அதே நேரத்தில்  கோட்சே அவர்களை யாரும் தூக்கி பிடிப்பதும் கிடையாது. தூக்கி பிடிக்கவும் கூடாது. அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள், எந்த மாற்று கருத்தும் இல்லை. முழு இந்தியாவும் பார்த்திருக்கு. மகாத்மா காந்தி விஷயத்தில் கோட்சே  வை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதே கிடையாது. ஐடியாலஜிக்கலி என்ன கருத்துக்களை கோட்சே சொன்னாலும் ஏற்றுக்கொள்ள போவது கிடையாது.

அதனால் திடீர், குபீர் இதெல்லாம் விட்டுட்டு…  தமிழ்நாட்டில் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களை முன்னிறுத்தி,  தந்தையின் பெயரை தொடர்ந்து வைப்பதை விட்டு விட்டு…  நாமக்கலில் இருந்து ஒவ்வொரு ஊராக….  அந்த ஊரைச் சார்ந்த முக்கியமான மனிதர்களுடைய பெயரை வைப்பேன் என்று சொன்னால் ?  முதலமைச்சர் நானே பாராட்டி தலை வணங்குகிறேன்.