
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று இந்திய ரயில்வேயில் காணப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் காணப்படும் ஒழுங்கு முறைகளை பேசும் விதமாக உள்ளது. அதாவது அந்த வீடியோவில் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஒருவர் வாசலில் அமர்ந்திருக்கிறார்.
அவர் ரயில் நிலையம் வந்ததும் அருகில் டிடிஇ அல்லது அதிகாரிகள் இருக்கிறாரா என்று சுற்றிப் பார்த்து கொண்டே மாற்றுத்திறனாளி போல மெதுவாக ரயிலிலிருந்து இறங்குகிறார். பின்னர் டிடிஇ இல்லாததை அறிந்ததும் சாதாரணமாக நடந்து செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
विकलांग बन फ्री में यात्रा किया और फिर सावधानी के साथ ये उतर रहा है. ग़ज़ब ड्रामेबाज लोग हैं.
— Priya singh (@priyarajputlive) June 15, 2025
சிலர் “இவர்களால் உண்மையான மாற்றுத் திறனாளிகளும் சந்தேகிக்கப்படுகிறார்கள்” என்றும், “இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பதிவிட்டுள்ளனர். இந்திய ரயில்வே சட்டத்தின் படி மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் அனுமதி இல்லாமல் பயணம் செய்தால் ரூ. 500 அபராதம் அல்லது ஒரு மாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த சம்பவம் ரயில்வே விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது.