பெங்களூருவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் 9-வது மாதத்தில், பாரம்பரிய நைன்பார்ட் புடவை (Nauvari saree) அணிந்து கொண்டு மிகக் கடினமான ‘சக்ராசனம்’ போன்ற அட்வான்ஸ் யோகாசனங்களை அசால்ட்டாகச் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் புயல கிளப்பி வருவதுடன், இது நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் சஷி பிரபா திவேதி என்ற தொழில்முறை யோகா ஆசிரியை, தான் 39 வார கர்ப்பிணியாக இருக்கும் வேளையில் (அதாவது பிரசவத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்) புடவை கட்டிக்கொண்டு, முகத்தில் எவ்வித பதற்றமும் இல்லாமல் மிக லாவகமாக யோகா செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோ வெளியாகி இதுவரை 21 மில்லியனுக்கும் (2 கோடிக்கும்) அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரண்டு பிரிவாகப் பிரிந்து கமெண்ட் பாக்ஸில் மோதி வருகின்றனர்.
சிலர் இதனை ஒரு ‘தாயின் வலிமை’ என்று பாராட்டி வரும் வேளையில், பெரும்பாலான நெட்டிசன்கள், “சமூக வலைத்தளங்களில் வெறும் வியூஸ் மற்றும் லைக்ஸ் வாங்குவதற்காகப் பிறக்கப்போகும் குழந்தையின் உயிரோடு விளையாடும் அலட்சியமான ஸ்டண்ட் இது” என்று மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஆசிரியை சஷி பிரபா, “இது என்னுடைய பல வருடத் தீவிர பயிற்சி, கடின உழைப்பு மற்றும் என் உடலின் மீது எனக்குள்ள நம்பிக்கையால் சாத்தியமானது; நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க இதைச் செய்யவில்லை, இது என் வாழ்நாளின் ஒரு பகுதி” என்று விளக்கியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு பெண்ணின் கர்ப்ப காலமும் முற்றிலும் மாறுபட்டது என்பதால், இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு யாரும் வீட்டில் தனியாக இதை முயற்சி செய்ய வேண்டாம் என்றும், எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்யும் முன்பு கண்டிப்பாகத் தங்களின் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் பெண்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
