செய்தியாளர்களை சந்தித்த தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, டி.ஆர்.பாலு அவர்கள்  இந்த டைம் சீட்டு கொடுப்பாங்க என்ற நற்பாசையில் பேசுகிறார் என்று நானும் குற்றச்சாட்டு வைக்கிறேன். 80 வயசுக்கு மேல் ஆகிவிட்டது அண்ணன் டி ஆர் பாலு அவர்களுக்கு…  அவருடைய பையன….  குடும்ப அரசியலில் கொண்டு வந்து,  இண்டஸ்ட்ரியல் மினிஸ்டரா வச்சிருக்கார். அவர் மேல ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் கேஸ் இருக்கு.

மன்மோகன் சிங் தன்னுடைய கேபினேட்-இல் இருந்து ஊழல் செய்கிறார் என்பதற்காக தான்  2ஆவது UPA அரசில் மன்மோகன் சிங் டி.ஆர் பாலு அவர்களுக்கு மந்திரி சபை ஸ்தானம் கொடுக்கவே இல்லை. நானும் பல முக்கியமான விஷயங்களை மக்கள் முன்னாடி வைக்கிறேன்.

எப்படியாச்சி இப்படி பேசினால் ? திமுககாரங்க நமக்கு ஒரு எம்பி சீட்டு கொடுத்துற  மாட்டாங்களா ? பையன் இப்போ அமைச்சர்… அப்படி என்கிற நட்பாசையில் ஆளுநரை வம்புக்கு இழுக்கிறார் என்பது என்னுடைய கருத்து. அப்படித்தான் ஆளுநர் ஆர்.என் ரவி மீது டி.ஆர் பாலு வைத்த குற்றசாட்டை பார்க்கின்றேன் என தெரிவித்தார்.