வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த பாறை வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் மேலும் ஒரு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலை தீபமாலை அமைந்துள்ள குகை நமச்சிவாய ஆலயத்தின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இதனால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.