நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் புஷ்பராஜ். இவருக்கு சகோதரி ஒருவர் இருந்துள்ளார். புஷ்பராஜ் சகோதரி இன்ஜினியரிங் முடித்து நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் புஷ்பராஜ் சகோதரிக்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் விஜய் என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் புஷ்பராஜ் சகோதரி, விஜயை திருமணம் செய்ய அவரது வீடான கள்ளக்குறிச்சிக்கு சென்று உள்ளார்.
ஆனால் விஜய்யின் குடும்பத்தினர் இரு விட்டாரின் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற வேண்டும் எனக் கூறி புஷ்பராஜ் சகோதரியை மீண்டும் அவரது வீட்டிற்கே அனுப்பி வைத்துவிட்டனர். இதனால் மனவேதனையில் புஷ்பராஜன் சகோதரி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இருப்பினும் அவரைக் காப்பாற்றி குடும்பத்தினர் அறிவுரை கூறியுள்ளனர். தனது சகோதரியின் நிலைமைக்கு விஜய் தான் காரணம் என புஷ்பராஜ், விஜயை கொலை செய்ய நினைத்துள்ளார். அதனால் விஜய் இடம் காதலுக்கு சமாதானம் தெரிவிப்பதாக கூறி நெல்லைக்கு வர வைத்து தனது நண்பன் சிவாவின் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளனர்.
அங்கு வீட்டில் புஷ்பராஜ், விஜயும் பேச்சு வார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டு புஷ்பராஜ் மற்றும் அவரது நண்பரான சிவா உடன் சேர்ந்து விஜயை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே விஜய் துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார். பின்னர் புஷ்பராஜும் சிவாவும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விஜயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளியான புஷ்பராஜ் மற்றும் சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கையின் காதலனை அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.