வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல  மாவட்டங்களில் கனமழை பெய்து. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்கனவே வ.உ.சி நகர் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது திருவண்ணாமலை அண்ணாமலை தென்கிழக்கு பகுதியில் சுமார் 1000 அடி அளவிற்கு மழையின் உச்சியில் இருந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கார்த்திகை மகா தீபம் ஏற்றும் இடத்திற்கு முன்பகுதியில் இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.