சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய எடப்பாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு எடப்பாடி சேலம் பிரதான சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இருக்கும் கடை தெருவில் அரைக்கால் டவுசர் மட்டும் அணிந்தவாறு மணி ஒரு பெண்ணை துரத்தினார்.

ஒரு கட்டத்தில் மணி அந்த பெண்ணை பிடித்து அவரிடம் தனது பேண்ட் சட்டையை கொடுக்குமாறு கெஞ்சியுள்ளார். அந்த பெண் தர மறுத்தார். இதனால் கோபமடைந்த மணி அந்த பெண்ணின் சேலையை உருவியதால் அரை நிர்வாணத்துடன் இருவரும் சண்டை போட்டனர். அவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த பெண் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த சத்யா என்பது தெரியவந்தது.

அந்த பெண்ணிடம் மணி 2000 ரூபாய் பணத்தை அபகரித்துக் கொண்டதாக தெரிகிறது. அதனை மீட்டு தருமாறு அந்த பெண் அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் மணி அந்த பெண் தான் பணத்தை பறித்துக் கொண்டதாகவும், அதை தட்டி கேட்டபோது தனது ஆடைகளை உருவி விட்டதாகவும் அழுது கொண்டே கூறினார். இருவரும் அரைகுறை ஆடையுடன் நீண்ட நேரமாக கட்டி சண்டை போட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.