ஆடம்பரங்களை வெளிப்படுத்தி மற்றவர்களைக் கவரத் துடிக்கும் இன்றைய காலகட்டத்திற்கு முற்றிலும் மாறாக, மக்களின் பார்வையிலிருந்து வீண் செலவுகளிலிருந்து தப்பிப்பதற்காகத் திட்டமிட்டுத் தன்னை ஒரு எளிய மனிதராகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் பெங்களூரு நபர் ஒருவரின் சமூக வலைதளப் பதிவு தற்போது இணையவாசிகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

புதிய வாகனங்களை வாங்குவதற்கான முழுமையான பொருளாதாரப் பின்புலம் இருந்தபோதிலும், தற்போது ஒரு தசாப்த காலம் பழமையான சிறிய ரக ஹேட்ச்பேக் காரையே பயன்படுத்தி வரும் மீனங்க் மின்னு என்ற அந்த நபர், தனது ஆடம்பரமான ஆப்பிள்நிறுவன சாதனங்களான ஐபோன் மற்றும் மேக்புக் ஆகியவற்றை விற்றுவிட்டு, அதற்கு பதிலாக விவோ மற்றும் ஆசஸ் நிறுவனத் தயாரிப்புகளின் பொருள்களுக்கு மாறியுள்ள விநோதத்தை லிங்க்ட்இனில் இதுகுறித்து அவர் தனது பதிவில் விரிவாக விளக்கியுள்ளார்.

ஆசஸ் கணினியின் விலையானது ஐபோன் மற்றும் மேக்புக்கை விடவும் மிக அதிகம். எனது இலக்கு செல்வந்தராகக் காட்டிக்கொள்வது அல்ல மேலும், தேசத்தின் நிஜமான பெரும் புள்ளிகள் யாரும் விலையுயர்ந்த நவீனக்  விடுதிகளில் பொழுதைக் கழிப்பதில்லை என்றும்,அவர்களின் மில்லியன் டாலர் மதிப்பிலான வணிகப் பேச்சுவார்த்தைகள் யாவும் பழமையான பாரம்பரியக் கடைகளிலேயே சுமுகமாக முடியும்.

என்றும் குறிப்பிட்டுள்ள அவர், ஆடம்பரங்களைக் குறைத்து நிம்மதியான வாழ்வு வாழுமாறு அறிவுறுத்தியுள்ளார். தோற்றத்தை வைத்து விலை நிர்ணயிக்கும் தந்திரங்களை அம்பலப்படுத்திய இவரின் இந்த மாறுபட்ட கருத்து, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.