மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள பவ்லி அணைப் பகுதிக்குச் சென்ற குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா சென்ற குடும்பத்தினரை மறித்து, அங்குள்ள நபர்கள் அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், அவர்களைத் துரத்திச் சென்று தாக்கும் அதிர்ச்சிகரமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்தது என்ன?
சுமார் எட்டு நாட்களுக்கு முன்பு, பவ்லி அணைக்கு அருகே உள்ள நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சுற்றுலா சென்ற குடும்பத்தினர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 44 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர், மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் அங்குச் சென்றிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அப்பெண்ணை வழிமறித்து அநாகரீகமான சைகைகளைச் செய்து துன்புறுத்தியுள்ளனர்.
குடும்பத்தினர் இதைத் தட்டிக்கேட்டபோது, அந்த கும்பல் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து, அவரிடம் இருந்த கைபேசியைப் பறித்துள்ளது. கணவர் இதைக் தடுக்க முயன்றபோது, அவரது கழுத்தில் இருந்த 20 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்ததுடன், குடும்பத்தினர் அனைவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதன்பிறகு, குடும்பத்தினர் காரில் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, அவர்களை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று, காரின் மீது இரும்பு கம்பியால் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
போலீஸ் நடவடிக்கை:
இந்தச் சம்பவம் தொடர்பாக இகத்புரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதலில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு, மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
விஷால் படாடே, அனிகேத் மன்வேதே, அனிருத்தா பாக்டே, சாகர் கிதே, வினோத் போரடே, சச்சின் அடோலே, அர்ஜுன் அடோலே, தேவிதாஸ் பகத் மற்றும் அஜய் தல்பகத் உள்ளிட்ட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பிற வாகனங்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The assault on tourist family at Nashik requires the full force of law. The perpetrators need to be given exemplary punishment, which is most unlikely unless Yogi medicine is administered. On second thought, I must say again, road rage is a zero-sum game for both parties. Legal… pic.twitter.com/nKTqGxT5kt
— Lt Col Sushil Singh Sheoran, Veteran (@SushilS27538625) July 15, 2026
“>
சுற்றுலாத் தலங்களில் பெண்கள் மற்றும் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
