மதுரை மாவட்டத்திலுள்ள தெப்பக்குளம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் தெப்பக்குளம் பேருந்து நிலையம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக இரு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். மேலும் சில மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு மாணவரை தாக்கியுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் கற்களை எரிந்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சாலையில் பொதுவெளியில் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பகுதியில் பள்ளி மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது குறித்து, பெற்றோர்களும் சில சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.