மயிலாடுதுறையில் ஐயப்ப சுவாமி வேடத்தில் கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் ரஞ்சித் மீது அகில பாரத இந்து மகாசப நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை உள்ள நிலையில் இசைவாணி பாடிய அந்த பாடல் தடையை கேள்வி கேட்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் அடிப்படையில் இசைவாணி கிறிஸ்தவர் என்பதாலும், ஐயப்பன் சுவாமி பற்றி அவதூறாக பாடிய பாடல் இந்து மதத்தையும் பக்தர்களின் நம்பிக்கையையும் புண்படுத்தி விட்டதாக தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இசைவாணியை கைது செய்ய வேண்டும் என ஐயப்பன் பக்தர்களும், இந்த அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை அகில பாரத இந்து மகாசபா சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் இசைவாணி மீது புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐயப்ப சுவாமியை பற்றி தவறாக சித்தரித்து பாடல் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஐயப்பன் வேடம் அணிந்த நபருடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார். ஐயப்பன் வேடமடிந்த நபருடன் அலுவலகத்தின் உள்ளே செல்வதற்கு காவல் துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உள்ளே சென்ற நிர்வாகிகள் இந்துக்கள் மற்றும் தெய்வங்களை இனி வரும் காலங்களில் யாரும் இழிவு படுத்தி பேசாதவாறு இந்த பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். மேலும் வழுவோர் வழிக்கரையான் ஆலயம் ஐயப்ப சுவாமியின் பூர்வீக இடம் ஆகும். இந்நிலையில் புராண கதைகளை ஆராய்ந்து கோவிலுக்கு கூட முழுக்க நடத்திட வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றுள்ளனர்.