கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஜனவரி 12) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் சிபிஐ ஆஜர் குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, விஜய் இப்போது சிபிஐ-யின் வலையில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், விஜய்யின் தற்போதைய நிலையை “சிங்கம் வாயில் சிக்கியது போன்ற ஒரு சூழல்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இது தவெக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
