சமூக வலைதளங்களில் தினமும் காமெடி வீடியோக்கள் வைரலாகிக் கொண்டே இருக்கின்றன. அதுபோன்று தற்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வீடியோவில், சாலையில் இரண்டு காளைகள் மோதி சண்டையிட்டுக் கொண்டிருக்க, அங்குள்ளவர்களை பயமுறுத்தும் அந்த தருணத்தில், ஒரு இளம்பெண் ஸ்கூட்டியில் வந்தபோது நடந்த சம்பவம் நெட்டிசன்களுக்கு வெடியாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by A N K I T (@iamankit.____)

காட்சியில், இரண்டு காளைகள் சாலையில் ஒருவருக்கொருவர் பெரும் ஆத்திரத்துடன் மோதி தாக்கிக் கொண்டனர். அருகிலிருந்தவர்கள் கூட ஓடி ஒதுங்கும் அளவுக்கு அந்த சண்டை வலிமையாக இருந்தது. இதே நேரத்தில், ஒரு பெண் ஸ்கூட்டியில் பின் வழியாக சென்று அவர்களைக் கடந்து செல்ல நினைத்தார். ஆனால், எதிர்பாராத விதமாக காளைகள் திடீரென திரும்பி, அவரை ஸ்கூட்டியை மோதி கீழே தள்ளி விட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த வீடியோ, iamankit.____ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது. இதுவரை 4.8 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று, 20 லட்சம் பேர் லைக்கும் செய்துள்ளனர். ஒரு நெட்டிசன், “மேடம், இது சாலை இல்ல… ரிங் நடக்குது!” என நையாண்டி செய்துள்ளதுடன், “இது WWE இல்ல… GWW – ‘Galliwale Wrestling’” எனவும் ஒருவர் கருத்து பதிவு செய்துள்ளார்.