பெங்களூருவில் புதுமைகள் தினமும் நடைபெறும். ஒருபக்கம் வீட்டின் வாடக உயர்வு, மறுபக்கம் ஆட்டோ டிரைவர்களின் விசித்திர முயற்சிகளுக்காக இந்த நகரம் பேசப்படும். இப்போது அந்த வகையில், ஒரு ஆட்டோ டிரைவர் செய்த விசித்திர முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஆட்டோக்களில் காணப்படும் மென்மையான இருக்கைக்கு பதிலாக, இவர் ஏர்கனாமிக் கேமிங் சேர் ஒன்றை நிறுவி கொண்டு ஆட்டோ ஓட்டுகிறார்.
got blessed with an ergonomic auto today pic.twitter.com/f14ZTEsEym
— Narasimha Kanduri (@NarasimhaKan) September 4, 2025
இதைப் பற்றி, `Narasimha Kanduri` என்ற X பயனர், அந்த டிரைவருடன் பயணித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “இன்று எனக்கு ஒரு ஏர்கனாமிக் ஆட்டோ அனுபவிக்க வாய்ப்பு கிடைத்தது” என பதிவிட்டுள்ளார். பொதுவாக, கேமிங் இருக்கைகள் நீண்ட நேரம் அமர்வதற்கேற்ப அமைக்கப்பட்டு, முதுகுப் பகுதி சிரமம் இல்லாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டவை. நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டும் டிரைவர்களுக்கு முதுகு வலி ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த டிரைவர் சுதந்திரமாக ஏர்கனாமிக் இருக்கையை நிறுவியிருக்கிறார்.
இந்த தனித்துவமான முயற்சி குறித்து இணையத்தில் ஏராளமான பாசிட்டிவ் ரியாக்ஷன்கள் வருகின்றன. “இது இந்தியாவில் தான் நடக்க முடியும்!” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
