லக்னோவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழக வளாகத்தில், சட்டக் கல்லூரி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் காரில் 26 முறை அறைந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சின்ஹாட் காவல் நிலையத்தில் மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜான்வி மிஸ்ரா, ஆயுஷ் யாதவ், மிலன் பானர்ஜி, விவேக் சிங், ஆர்யமான் சுக்லா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக லக்னோ போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 26ஆம் தேதி பல்கலைக்கழக வாகன நிறுத்துமிடத்தில் நடந்த இந்த தாக்குதலில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மாணவர் தொடர்ந்து அறைந்ததும், அருகில் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

“>

 

தாக்குதலின் போது, “நடத்தை” குறித்த கேள்விகள் எழுப்பி, சில மாணவியரைப் பற்றி விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், புகாரின் அடிப்படையில் தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக லக்னோ காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, “வைரலான காணொளி குறித்து எங்களுக்கு தெரியாது; அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும்” என்று அமிட்டி பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தற்போது காவல்துறை மேல்  விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.