சமூக ஊடகங்களில் புகழ் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் சாலைகளில் நடனமாடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து ஒழுங்கையும் மீறி, இவ்வாறான செயல்கள் தொடர்ந்துவந்தாலும், சிலர் இதை வேடிக்கை எனக் காண, சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்துள்ளது, மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சாலை நடன சம்பவம்.

சேலை அணிந்து சாலையின் நடுவே நடனமாடும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. போஜ்புரி நடிகரும் பாடகருமான மனோஜ் திவாரியின் பாடலுக்கு நடனமாடும் அந்த பெண்ணின் வீடியோ, இன்ஸ்டாகிராமில் “@tina143khan” என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

வீடியோவில், பாடல் ஒலிக்கத் தொடங்கியவுடன் அந்தப் பெண் சாலையின் நடுவே நடனம் ஆட ஆரம்பிக்கிறார். பின்னால் இருந்து வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் நடனமாடுவதை தொடர்ந்து, அவளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த வழியாக வந்த ஒரு பேருந்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்துகிறார்.

பேருந்தில் இருந்த  பயணிகள், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, நடனத்தைக் கண்டுகளிக்கின்றனர். இந்த வீடியோவிற்கு இதுவரை 9 மில்லியன் (90 லட்சம்) பார்வைகள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்-கள், மற்றும் நூற்றுக்கணக்கான விமர்சனக் கருத்துகள் கிடைத்துள்ளன.

 

 

View this post on Instagram

 

A post shared by Tina Tina (@tina143khan)

இது பற்றி ஒரு பயனர் “நிறுத்துங்க சகோதரி! நாகமணியை எடுத்த பிறகுதான் ஒப்புக்கொள்வீர்களா?” என ஒருவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

“பேருந்து ஓட்டுநர் பிரேக் போட்டிருக்கக்கூடாது!” என மற்றொருவர் எழுதியுள்ளார்.

“முழு பேருந்திலும் மகிழ்ச்சி பரவியது!” என மற்றொரு பயனர் பதிவு செய்துள்ளார்.

“பேருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டதாக டிரைவர் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்!” என ஒருவர் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த வீடியோ பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருந்தாலும், சாலை நடனங்களில் பாதுகாப்பு கோணமும், பொது ஒழுங்கும் முக்கியமானவை என்பதே போக்குவரத்து வல்லுநர்களின் பரிந்துரை. சமூக ஊடகங்களில் விரைவில் புகழ் பெறும் நோக்கத்தில், இதுபோன்ற செயல்கள் தனது உயிருக்கும், மற்றவர்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.