
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இறுதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே அரசியல் சூழல் மிகவும் சூடாக இருக்கிறது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது எப்படி ? அமலாக்கத்துறை அவர்களுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியது. பின்னர் அவர் டெல்லி வீடு, அவருடைய ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள வீடு என சோதனைகள் நடைபெற்றது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டது போன்ற பல விஷயங்களை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.