அண்மையில் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி ஒன்றில், தனக்குச் செங்கோட்டையனின் நீக்கம் குறித்து மனவருத்தம் இருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்தது பேசுபொருளானது. செய்தியாளர்கள் இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது, “எனக்கும் மனவருத்தம் இருக்கும், அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது; அதை ஈபிஎஸ்-ஸிடம் (EPS) தான் கூற வேண்டும்” என்று பதிலளித்துள்ளார். இந்தக் கருத்து, எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது.
உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அவர், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “எனக்கு மனவருத்தம் எதுவும் இல்லை. ஈபிஎஸ் என்னை நன்றாக வைத்துள்ளார். தயவுசெய்து இதை ஒரு BREAKING NEWS-ஆகப் போட்டு விடாதீர்கள்” என்று ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார். இதன் மூலம், செங்கோட்டையன் நீக்கம் தொடர்பான தனது முந்தைய கருத்துக்கும், தனக்கு மனவருத்தம் இருப்பதாகப் பரவும் செய்திக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயன்றார் செல்லூர் ராஜூ.
