கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ பரப்புரைக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்துப் பேசிய நடிகர் அஜித் குமார், “அந்தச் சம்பவத்திற்கு ஒருவரை (நடிகர் விஜய்) மட்டும் குறை கூறுவது சரியல்ல; நாம் அனைவரும் பொறுப்பு” என்று தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்துத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த உதயநிதி, “நடிகர் அஜித்தின் பேட்டியை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. அது அவருடைய சொந்த கருத்து. அவர் என்ன கருத்தைத் தெரிவித்திருந்தாலும், அவருக்கு எனது பாராட்டுதல்கள்” என்று கூறி, அஜித்தின் கருத்தை வரவேற்றுள்ளார்.