வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதில் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மழை மற்றும் புயல் அபாயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இதன் தாக்கத்தை கண்காணிக்க கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
