மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, திமுக நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். சென்னையில் நள்ளிரவில் அதிக மழை பெய்யக் கூடும் என்பதால், அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் தூங்காமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக ஐடி விங் நிர்வாகிகளை சந்தித்தபோது, அவ்வாறு அறிவுரை வழங்கினார்.