பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ் – 394, ஆங்கிலம் 252 , கணிதம் 233 , இயற்பியல் 292,  வேதியியல் 290,தாவரவியல் 131, விலங்கியல் 132, வரலாறு 391 , புவியியல் 106 என மொத்தம் 2,222 பணியிடங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி போட்டி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.