தமிழகத்தில் உள்ள பொறியியல், தலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களிடம் வரவேற்பு பெறாத மற்றும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு வேலைவாய்ப்புக்கு தேவையான புதிய பாடங்கள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் கணித பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் கணித பாடப்பிரிவு 9 கல்லூரிகளிலும் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவு ஒரு சில கல்லூரிகளிலும் நீக்கம் செய்யப்பட்டது.

இந்த கல்வியாண்டில் பொறியியல் கல்லூரியில் VLSI design, Logistics and advanced communication technology போன்ற மூன்று படிப்புகளை தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் logistic management and footwear manufacturing ஆகிய இரண்டு படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரண்டு பாடத் திட்டத்திற்கும் செமஸ்டர் கட்டணமாக 20 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.