கடந்த சில மாதங்களாக தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 23) மீண்டும் உயர்வு கண்டுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.100 அதிகரித்து ரூ.9,315க்கும், ஒரு சவரன் ரூ.800 அதிகரித்து ரூ.74,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வு, நகைத் துறையினரும் பொதுமக்களும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேபோல், வெள்ளி விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராம் ரூ.2 அதிகரித்து ரூ.130க்கும், ஒரு கிலோ ரூ.1,30,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, வர்த்தகர்களிடையே சலசலப்பையும், பொதுமக்களிடையே சற்று அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.