நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் பாஜக மண்டல பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக நெல்லை நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு சென்றார். இந்த மாநாட்டில் பாஜக தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக அமர்த்துவது பாஜகவின் கடமை. அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு நமக்கே உள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு, எதிர்கால தேர்தல் வெற்றிக்கான திட்டங்களை விவாதித்தனர். அண்ணாமலையின் இந்த பேச்சு, அதிமுக  வட்டாரத்தில் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.