வரும் தேர்தலை முன்னிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சின்னம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, தவெக ‘ஆட்டோ’ சின்னத்தில் போட்டியிடும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த சின்னம் குஜராத்தை சேர்ந்த Bharatiya Tribal Partyக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதால், தவெகவுக்கு அது கிடைக்க வாய்ப்பில்லையெனத் தெரியவந்துள்ளது.
இதனால், தற்போது தவெக தேர்தல் ஆணையத்திடம் ‘விசில்’ சின்னத்தை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்குகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டியுள்ளது. தவெக சின்னம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
