தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் உள்ள மரக்கடை பகுதியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கும் நிலையில் ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன் பிறகு வழி நெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜயின் பரப்புரை வாகனம் மெதுவாக நகர்ந்து தற்போது டோல்கேட் பகுதியை அடைந்துள்ளது.

காலை 10:30 மணி அளவில் நடிகர் விஜய் திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்வதாக இருந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்னும் அவர் அந்த பகுதிக்கே சென்றடையவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய்யை பார்க்க சென்ற கர்ப்பிணி பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் வெயில் காரணமாக திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று பத்துக்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசல் காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களில் ஆறு பேருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும்  அடுத்தடுத்து தொண்டர்கள் இவ்வாறு மயங்கி விழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.