தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் பிரச்சாரம் செய்யும் நிலையில் இன்று காலை முதலே வழிநெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இன்று காலை 10:30 மணியளவில் திருச்சி மரக்கடை பகுதியில் நடிகர் விஜய் பேசுவதாக இருந்த நிலையில் இன்னும் அவர் அந்த பகுதிக்கே சென்றடையவில்லை. கூட்ட நெரிசல் காரணமாக அவரது பிரச்சார வாகனம் மெதுவாக நகர்ந்து செல்கிறது.

 

இதற்கிடையில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நடிகர் விஜயை வரவேற்பதற்காக செய்யும் விஷயங்கள் தற்போது செய்திகளை பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த வகையில் ஒரு ரசிகர் தன்னுடைய முகம் மற்றும் உடம்பில் குண்டூசியால் ரூபாய் நோட்டுகளை குத்தி வைத்துவிட்டு நடிகர் விஜய்க்காக மேளம் அடித்து அவரை வரவேற்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.