நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்குகிறார். இந்த நிகழ்வை முன்னிட்டு திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
இந்த பிரச்சாரத்திற்கு திருச்சி காவல்துறையினர் 23 விதிமுறைகள் விதித்து அனுமதி வழங்கினர். இதில் குறிப்பிடத்தக்கது – மரங்கள் மற்றும் கட்டிடங்களில் ஏறுதல், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட குறைவான உடல்நலப்பட்டவர்களை கூட்டத்தில் பங்கேற்க வைப்பதை தவிர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள். ஆனால், இந்த நிபந்தனைகளை மீறி விஜய்யின் ரசிகர்கள், அவரது பிரச்சாரத்தை காண கட்டிடங்கள், சிலை மேடைகள், கூண்டுகளின் மேல் ஏறி நின்றும், அமர்ந்தும் பார்வையிட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் பரவி, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுத்தியுள்ளன. “விஜய்க்கு கெட்டப் பேரு வாங்கிக் கொடுக்க நீங்களே போதும்” என சிலர் ரசிகர்களை குற்றம் சாட்டியுள்ளனர்.
#Watch | ஆபத்தை உணராமல், மரங்கள், மின் கம்பங்கள் மீது ஏறி அமர்ந்திருக்கும் தவெக தொண்டர்கள்! #SunNews | #VijayTVK | #Trichy pic.twitter.com/iwMNLEt6cL
— Sun News (@sunnewstamil) September 13, 2025
மேலும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் கூட்டத்தில் பங்கேற்றது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைகளை வெயிலில் கையாளும் முறையைக் கண்டித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். போக்குவரத்து காவல்துறையின் விதிப்படி விஜய் பயணிக்கும் வாகனத்திற்கு முன்னும் பின்னும் ஐந்து வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என இருந்தது. ஆனால், அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்ததோடு, எதிர் திசையிலும் செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
#Watch | விஜய் பிரசார பயணத்தின்போது, பைக் ஸ்டண்ட் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய தவெக தொண்டர்கள்! #SunNews | #TVKVijay | #Trichy pic.twitter.com/4rLSN7bSCY
— Sun News (@sunnewstamil) September 13, 2025
அதுமட்டுமின்றி பைக்கில் விஜயின் ரசிகர்கள் ஸ்டண்ட் செய்கிறார்கள். மேலும் கார்களின் மீது ஏறியும் பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நிலையில் இதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | திருச்சியில் கொடிக் கம்பம் மீது ஏறியும், கார்கள் மேலே அமர்ந்து பயணம் செய்தும் தவெகவினர் அட்ராசிட்டி!#SunNews | #TVKVijay | #TVKTrichy pic.twitter.com/hw2Bfk1yKq
— Sun News (@sunnewstamil) September 13, 2025
