தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டணி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்கிறார். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விலகிய உள்ள நிலையில் மதுரை ஏர்போர்ட்டுக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்பதாக கூறியதால் அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜான் பாண்டியனும் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் கூட்டணியில் இருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்க இருக்கும் நடிகர் விஜய்க்கு இந்திய ஜனநாயக கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாரிவேந்தர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்ற இருக்கிற உங்களது வெற்றிப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என கூறியதால் நடிகர் விஜயுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு பங்கு உண்டு என அறிவித்துள்ளதால் அடுத்தடுத்து அவர் கட்சியில் புதிய கட்சிகள் இணையலாம் என்று கூறப்படுகிறது.