தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துகளையும் பேசுவார். சமீபத்தில் கூட நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அவர் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் ஆளும் கட்சியை விமர்சித்துதானே அரசியல் செய்ய முடியும் அதற்காகத்தான் விமர்சிக்கிறார் என்றார்.
அதன் பிறகு அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு இப்போதைக்கு அது பற்றி பேச முடியாது எனவும் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தன்னுடைய x பக்கத்தில் நடிகர் பார்த்திபன் தற்போது ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் இன்று மாலை 4:46 மணிக்கு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அறிவிப்பு வரப்போகிறது உஷார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் விஜய் இன்று திருச்சியில் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் நிலையில் திருச்சி நகரே போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடுகிறது.
திருச்சி மரக்கடை பகுதியில் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்த நிலையில் இன்னும் அவரது பிரச்சார வாகனம் கூட்ட நெரிசல் காரணமாக அந்த இடத்தை சென்றடையவில்லை. மேலும் நடிகர் விஜய் முதல்முறையாக இன்று தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் மற்றொரு புறம் நடிகர் பார்த்திபன் இப்படி ஒரு பதிவு வெளியிட்டுள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Friends..
இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது.
உஷார்!!! pic.twitter.com/jK1p5YdAeA— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 13, 2025
