கரூரில் நடிகர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளதோடு இதுவரை இரண்டு பேரை மட்டுமே கைது செய்த நிலையில் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் அரசு இவ்வளவு தாமதம் செய்வது ஏன் என கேள்வி எழுப்பியது. அதன் பிறகு கரூர் துயரம் நடந்தபோது ஒட்டுமொத்த கட்சியினரும் மீட்பு பணியில் இருந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மட்டும் அதாவது நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக அங்கிருந்து கிளம்பிவிட்டனர் என்று நீதிபதி கூறியதோடு இதற்காக தமிழக வெற்றிக்கழகத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.
அதே நேரத்தில் நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதால் அந்த வாகனத்தை இன்னும் பறிமுதல் செய்யாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், நடிகர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை எனவும், இது என்ன மாதிரியான கட்சி எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கரூர் துயரத்திற்காக தமிழக வெற்றி கழகத்தினர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது அந்த கட்சித் தலைவரின் மனநிலையை காட்டுகிறது என்றார் நீதிபதி. மேலும் சமூக வலைதளத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவு செய்ததற்காக ஆதவ் அர்ஜுன மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு ஒரு சிறிய பதிவு கூட அதாவது சின்ன வார்த்தை கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.
இவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதி ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
