தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஜய் மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தின் போது கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் அதிக அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர். அதன் பிறகு நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் இன்னும் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ விசாரணை கேட்ட தமிழக வெற்றி கழகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு சனி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி, செந்தில்குமார் சரமாரியான கேள்விகளை முன் வைத்துள்ளார்.
அதாவது கரூர் சம்பவத்தின் போது அனைத்து கட்சிகளும் மீட்பு பணியில் இருந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் மட்டும் அந்த இடத்தை விட்டு சென்று விட்டனர். இதற்காக தமிழக வெற்றி கழகத்தினருக்கு இந்த நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது என்றார். மேலும் அனைத்து கட்சியினரும் மீட்பு பணியில் இருந்த நிலையில் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மட்டும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று நீதிபதி கூறினார்.
அதன்பிறகு கரூரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா.? கரூர் நெரிசல் விவகாரத்தில் சேதங்களை கணக்கிட்டீர்களா. இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது வழக்கு பதிவு செய்ய என்ன தடை.? புகார் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டாமா. நடிகர் விஜய் பயணித்த பேருந்து மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளிவருகிறது.
இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா. நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. கரூர் சம்பவத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. Man made disaster நடந்துள்ளது. கரூர் விவகாரத்தில் அரசு அமைதியாக இருக்க முடியாது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் தான். தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை. பரப்புரை ஏற்பாட்டாளர்கள் மற்றும் தலைவர் என அனைவருமே சம்பவம் நடந்தவுடன் அவர்களை பின்தொடர்பவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்து விட்டனர் என்று கூறினார்.
மேலும் கரூர் சம்பவத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கரூர் மாவட்ட எஸ்பிஐ குழுவில் இணைத்து வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
