மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள திருமால் கிராமத்தில் கல்குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதைக் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கல்குவாரி அமைப்பால் சுற்றுச்சூழல் மற்றும் குடியிருப்பு பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்பதைக் குறிப்பிட்டு, அந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி, இன்று (அக். 3) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் திருமால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை காரணம் காட்டி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தகவல் வெளியடவில்லை.
