தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீரென்று ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் கட்ட சிகிச்சை தந்த நிலையில் முதல்வர் வழக்கமான உடல் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார் என கூறப்படுகிறது.