2022-23ஆம் கல்வியாண்டானது முடிவடைந்து 2023-24 கல்வி ஆண்டானது ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் இந்த திட்டம் சோதனை முயற்சியாக சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த வருடம் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டமானது அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.404 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 பள்ளிகளில், 15,75,900 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாரத்தில் 2 நாட்கள் சிறுதானியங்களை கொண்டு உணவு தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.