வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய அக் 17 – நவ 30 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜூலை 21 முதல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியை மேற்கொள்வார்கள். 2024 ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 26க்குள் விண்ணப்பத்திற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும்  17 வயதுடைய அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். அவர்கள் 18 வயதை அடைந்தபின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.