தமிழகத்தில் உடல் நல கோளாறு மற்றும் சாலை விபத்துஆகியவற்றை மூல காரணமாக கொண்டுள்ள மது கடைகளை மூட வேண்டும் என பல வருடங்களாக மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தமிழகத்தில் சுமார் 500 மது கடைகள் மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பை அமைச்சரவையில் அரசை வெளியிட்ட நிலையில் தற்போது மதுக்கடைகளை மூடுவதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி சென்னையில் முதல் கட்டமாக இருபது மது கடைகள், காஞ்சிபுரத்தில் 25க்கும் மேற்பட்ட மது கடைகள் மூடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசை அனுமதி இல்லாமலும் விதியை மீறியும் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மூட பொதுமக்கள் கோரிக்கை வைக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி உங்களின் பகுதிகளில் அரசின் விதிகள் மற்றும் நிபந்தனைகள் மீறி நடத்தப்படும் மதுக்கடைகளை முழுவதுமாக அகற்றக்கோரி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.