சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,520 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 13,571 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,08,568 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 224 க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,24,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.