தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செங்கோட்டையன் மற்றும் புஸ்ஸி ஆனந்த் கவனித்து வருகிறார்கள். இன்று காலை 11 மணிக்கு மேல் கூட்டம் தொடங்க இருக்கும் நிலையில் அதிகாலை முதலே ரசிகர்களும் தொண்டர்களும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வர தொடங்கியுள்ளனர். நடிகர் விஜய் கோவைக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து கார் மூலம் ஈரோடு செல்கிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர்களில் ஈரோடு வரைக்கும் வந்தீங்களே கரூருக்கு போக மாட்டீங்களா.? இங்கு இருக்க கரூருக்கு போகல ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியாவுக்கு போறீங்க. What bro it’s very wrong bro போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் இதே போன்று இன்னொரு போஸ்டரில் விஜய் பரிதாபங்கள் என்று குறிப்பிட்டு ஜனநாயகன் டப்பிங் பணிகளில் கலந்து கொள்வது, மலேசியா செல்வது மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவைகளுக்கு விஜய் ப்ரெசென்ட் ஆகதாகவும், மக்கள் பிரச்சினைகளில் குரல் கொடுப்பது, மக்களை சந்திக்க கரூர் செல்வது போன்றவைகளில் ஆப்சென்ட் ஆவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தேவா தவெகவினர் மத்தியில்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.