மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.