அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூர்  பதற்றம் நிறைந்த மாநிலமாக மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) அமலில் இருக்கும் என மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மே 3ஆம் தேதி குக்கி மற்றும் மெய்டேய்  இன மக்களுக்கு இடையேயான வன்முறை போராட்டம் தொடர்ச்சியாக 146 நாட்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக இணையதள சேவை மாநிலம் முழுவதும் கொடுக்கப்பட்ட நிலையில், வன்முறை சம்பவங்கள் உச்சத்தில் இருந்த போது காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்களின் படங்கள் தொடர்ச்சியாக குக்கி குழுவினர் மற்றும் மெய்டேய்  குழுவினரால் பரப்பப்பட்டு  வந்தது.

இந்நிலையில் இம்பால் நகரத்தில் ஹிஜாம் லிந்தோயிங்காம்பி மற்றும் ஹேமன்ஜித் ஆகிய மாணவர்கள் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்கள் என்கின்ற 2 புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. முதல் புகைப்படத்தில் இருவரும் அமர்ந்திருப்பது போன்றும், அடுத்த புகைப்படத்தில் மரணம் அடைந்த பிறகு சடலமாக மீட்கப்படுவது போன்றும் இரண்டு புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், மணிப்பூர் மாநிலம் கடந்த 3 நாட்களாக பெரும் வன்முறை சம்பவங்களால் சூழ்ந்து வருகிறது.

இந்நிலையில் இணையதள சேவை நேற்று முடக்கப்பட்ட நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மணிப்பூர் மாநிலம் முழுவதும் அதனுடைய சட்டம் ஒழுங்கு அதிகாரம் அனைத்தும் உச்சவரம்பில் இருக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மணிப்பூர் மாநிலத்தின் மற்ற பகுதிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆயுதப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்களுக்கான அதிகாரம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரம் காவல்துறையினர், ஆயுதப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அறிவிப்பு அமலில் இருக்கும் என மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது

தொடர்ச்சியாக மணிப்பூர் மாநிலத்தில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு நடந்த வன்முறை சம்பவத்தில் இம்பால் நகரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் பல எல்லையோர நகரங்களில் இன்னமும் வன்முறை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அண்டை மாநிலங்களான நாகலாந்து, மிசோரம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் குக்கி மற்றும் மெய்டேய் இன மக்களுக்கு இடையேயான பிரச்சனைவலுத்து வருவதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த முடிவு எடுத்துள்ளது.