கடந்த சில நாட்களாகவே மேற்கு வங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியை விடுவிப்பது தொடர்பாக  மோதல் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து வேலை உறுதித் திட்டம் மற்றும் கிராமின் ஆவாஸ் யோஜனா தொடர்பாக செலுத்த வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு 50 லட்சம் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.