உத்தரபிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு கால் வாயில் நடந்த கோரமான சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பிருத்விநாத் கோயிலுக்கு செல்வதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் சேர்ந்து காரில் சென்றபோது, அவர்கள் பயணித்த வாகனம் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சரயு கால்வாயில் கவிழ்ந்தது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த சோகமான நிகழ்வுக்கு உடனடியாக அரசு கவனம் செலுத்தியுள்ள நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவித்து, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>