நாம் எவ்வளவுதான் சரியான உணவு முறைகளை பின்பற்றினாலும், தினமும் உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தாலும் எதிர்ப்பாராத விதமாக திடீரென ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதிலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.
அந்த வகையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் சத்புரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் விகல் சிங்(30). இவர் டெலிவரி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஜூலை 25 -ம் தேதி விகல் சிங் ஒரு கடைக்கு வெளியே நாற்காலியில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது விலகல் சிங் தீடீரென நாற்காலியில் இருந்து சரிந்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் விலகல் சிங்-ஐ மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்பு விகல் சிங் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் விகல் சிங் இறப்பிற்கான காரணம் மாரடைப்பு என தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
