உத்தரபிரதேச மாநிலம், நகரின் மெல்கெடி சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங் க் அருகே ஒரு பொலேரோ வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற பைக் ஓட்டுநர்கள், சைக்கிள் ஓட்டுநர்கள், பாதசாரிகள், கடைக்குள் இருந்தவர்கள் என பலர் மீது மோதியது.
விபத்தை ஏற்படுத்திய நபர் வாகனத்தை அங்கேயே விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சாலையில் நின்றிருந்த கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
राजस्थान के बारां जिले में मेलखेड़ी रोड पर एक बेकाबू बोलेरो ने ताबड़तोड़ कई बाइक सवारों और राहगीरों को रौंद दिया, जिससे करीब एक दर्जन लोग घायल हो गए। यह दर्दनाक घटना पास लगे सीसीटीवी कैमरे में कैद हो गई है। बोलेरो ने आधा दर्जन से ज्यादा बाइकों को टक्कर मारी और चालक वाहन छोड़कर… pic.twitter.com/Lh4aa4NORC
— ABP News (@ABPNews) August 3, 2025
இது தொடர்பாக கோட்வாலி காவல் நிலைய அதிகாரி யோகேஷ் சவுகான் கூறியதாவது, “ பொலேரோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர் யார் என்பது குறித்து ஆர்டிஓவிடம் தகவல் கேட்டுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பொலேரோ ஓட்டுநர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சாட்சியாளர்களின் வாக்குமூலங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
