சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூர் மாவட்டத்தின் பிரதாப்பூர் வனப்பகுதியில், தன் யானை குழுவிலிருந்து பிரிந்து தனியாக சுற்றி வந்த காட்டு  கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில்  நடமாடி வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

சாலையில் நடந்து சென்ற சில வாலிபர்களை அந்த யானை திடீரென விரட்டியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், அதே வனப்பகுதியிலுள்ள தேவ்கட் பகரிபாரா கிராமத்தில், 55 வயதான விவசாயி மொஹர்சாய் பெய்க்ரா தனது விவசாய நிலத்தில்  தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வந்த காட்டு யானைகள் அவரை மிதித்து கொன்றது. தகவல் அறிந்த வனத்துறை, காவல்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த தாக்குதலுக்கு பின்னர் கிராமத்தில் கடும் பீதி நிலவுகிறது.

விவசாயியின் மரணத்துக்குப் பிறகு, அவரது மனைவிக்கு வனத்துறை ₹25,000 நிவாரண தொகையை வழங்கியது. மேலும் ₹6 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என வனப்பகுதி அலுவலர் விஜய் குமார் திவாரி தெரிவித்தார்.