தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை சுமார் 18% வரை சரிந்து, மக்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கி ஓடும் அவலம் அதிகரித்துள்ளது. பிரைவேட் ஆஸ்பத்திரிகளில் லட்ச லட்சமாய் காசை கொட்டி ஏழை எளிய மக்கள் நடுத்தெருவுக்கு வருவதைத் தடுக்க, தமிழக அரசு ஒரு பிரம்மாண்ட எமோஷனல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது.

“அரசு மருத்துவக் கட்டமைப்பை மக்கள் முழுமையாக நம்ப வேண்டும்; நம் தமிழ்நாட்டின் பொது சுகாதார குறியீடு உலகத் தரத்திற்கு உயர வேண்டும்” என்ற உன்னத நோக்கத்தோடு, அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிக்க ‘தாய்மாமன் தங்கமோதிரம்’ என்ற அதிரடித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி அரசு மருத்துவமனையைத் தேடி வரும் ஏழை எளிய குடும்பத்துக் குழந்தைகளுக்கு இந்த அரசாங்கமே ‘தாய்மாமனாக’ நின்று தங்க மோதிரம் அணிவிக்கப் போகிறது என்ற செய்தி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தத் திட்டம் வெறும் கவர்ச்சித் திட்டம் மட்டுமல்ல, இதில் அணுவளவும் முறைகேடு நடந்துவிடக் கூடாது என்பதில் அரசு மிகத் தீவிரமாக உள்ளது. PICME போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை முழுமையாக இதில் இணைத்து, தகுதியானவர்களுக்கு மட்டுமே திட்டம் சென்றடைவதை டிஜிட்டல் முறையில் உறுதி செய்யப் போகிறார்கள். அதுமட்டுமில்லாமல், வழங்கப்படும் ஒவ்வொரு மோதிரமும் 100% சுத்தமான ‘BIS Hallmark’ தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்குக் கறாரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாகக் கொள்முதல் செய்வதன் மூலம் விலையைக் கட்டுக்குள் வைத்து, தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஏழைப் பிள்ளைகளின் கைகளில் தங்கம் சேரப் போகிறது. பிரைவேட் ஹாஸ்பிடல்களின் கல்லாவைக் காலி செய்து, அரசு மருத்துவமனைகளின் மாஸை மீண்டும் நிரூபிக்க வந்துள்ள இந்தத் திட்டம் தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் ஹாட் டாபிக்!